கொழும்பு வர்த்தக மைய கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள இலங்கை வங்கிச் சதுக்கத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து பதிவான சிறிது நேரத்தில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு பணிகளை ஆரம்பித்திருந்தாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் தீ விபத்துக்கான காரணம் இது வரையில் அறியப்படவில்லை என்றும் அது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தகவல் – சஞ்சுதன் சிவகொழுந்து




