கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கனகரஞ்சிதன் பிரணவன் கட்சித் தலைவர், திலீத் ஜயவீர முன்னிலையில் சத்தியப்பிரமாணம் பதவியேற்பு!

0
49

கொழும்பு மாநகர சபையில்  சர்வஜன அதிகாரம் கட்சியினை  பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினராக பதவியேற்ற கனகரஞ்சிதன்  பிரணவன், கட்சி தலைவர், சட்டத்தரனி திலீத் ஜயவீர முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செயது கொண்டார்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் இரண்டு ஆசனங்களை தமதாக்கிய சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினரான ரிப்ஹி பதூர்தீன் அவர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கனகரஞ்சிதன் பிரணவன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சி தலைவர், சட்டத்தரனி திலீத் ஜயவீரவின் அலுவலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற சத்தியப்பிரமானம் செய்யும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமண மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் துசார மனம்பேரி ஆகியோரும் கட்சியின் முக்கியஸ்தவர்களும்  உடனிருந்தனர்.

2018-2023 வரையான காலப்பகுதியில் ஐ.தே.க சார்பிலான உறுப்பினராக கொழும்பு மாநகர சபையினை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த பிரணவன் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சர்வஜன அதிகாரம் கட்சியின் சார்பில் கொழும்பு மாநகர சபைக்கு கொழும்பு மேற்கு தொகுதியில் வெள்ளவத்தை வடக்கு வட்டாரத்தில் போட்டியிட்டு கட்சி ரீதியாக அதிக வாக்குகளை பெற்ற உறுப்பினராவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here