கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (08) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
மாவட்ட நீதிமன்றத்தின் பதிவுப் பிரிவு, ஆவணக் காப்பகம், மாவட்ட நீதிமன்றத்தின் பழைய ஆவணக் காப்பகம், உணவக வசதிகள், பிஸ்கால் (Fiscal) பிரிவு உள்ளிட்ட நீதிமன்ற வளாகத்தின் தேவைகளை ஆய்வு செய்த அமைச்சர், ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அலுவலக இடத்தை விரிவுபடுத்துவது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
குறிப்பாக, மாவட்ட நீதிமன்ற ஆவணக் காப்பக வசதிகளை மேம்படுத்துதல், நீதிபதிகளின் வசதிகள் மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதுப்பித்தல் பணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த புதுப்பித்தல் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.