கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க சின்னச்சின்ன டிப்ஸ்..!

0
163

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே ஆகிய இரண்டு மாதங்கள் கோடை வெப்பத்திலிருந்து தப்பிப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படும். இந்த நிலையில் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க சில சின்ன சின்ன டிப்ஸ்களை தற்போது பார்ப்போம்.

கோடை காலத்தில் டேபிள் ஃபேன் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக டேபிள் பேன் முன் ஒரு அகன்ற பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளை கொட்டி வைத்தால் குளிர்ந்த காற்று வீச செய்யும்.

பெரும்பாலும் பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். திரைச்சீலைகளில் பருத்தி துணிகளை பயன்படுத்த வேண்டும்.

இரவு வேலைகளில் தேவையில்லாமல் விளக்கை எறிய விடக்கூடாது.

வீட்டில் கணினி இருந்தால் அதை உபயோகித்த பின்னர் உடனடியாக அனைத்து விட வேண்டும்

வீட்டில் தேவையற்ற பொருட்களை சேர்த்து வைத்திருந்தால் அவை வெப்பத்தை கடத்தும் என்பதால் தேவையற்ற பொருள்களை உடனடியாக நீக்கிவிட வேண்டும்.

ஆங்காங்கே கண்ணாடி டம்ளர்களில் கூலாங்கற்களை போட்டு வைத்தால் வீட்டில் குளுமையாக இருக்கும்.

இரவில் மொட்டை மாடியில் தண்ணீர் தெளித்தால் கீழே உள்ள வீட்டில் குளிர்ச்சி காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here