கொழும்பில் நடைபெறும் கோட்டா கோ ஹோம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹட்டன் பகுதியில் உள்ள பொது மக்கள் இன்று (09) ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்
அதன் போது ஆரப்பாட்ட காரர்கள் நரித்திலிருந்து மல்லிகைப்பூ சந்தி மீண்டும் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரம் வரை கோட்ட கோ ஹோம் என்று கோசமிட்டவாறு பாடசாலை திறக்க முடியாத அரசாங்கத்தை விரட்டியடிப்போம், எண்ணை கேஸ் இல்லாது மக்களை வதைக்கு அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் போன்ற வாசங்கள் எழுதிய பதாதைகளையும் சுலோக அட்டைகளையும் ஏந்திய வண்ணம் எதிர்ப்பு ஊர்வலத்தில் ஈடுப்பட்டனர்.
அதனை தொடர்ந்து ஹட்டன் மணிக்கூட்டுக்கு அருகாமையில் வருகை தந்து கோட்ட கோ ஹோம் என கோசமிட்டு நேற்று மக்களை தடுப்பற்காக பொலிஸ் ஊரடங்கு போட்டதனை கண்டித்தும் போராட்டகாரர்களை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இடையூறு ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கூட்டம் ஒன்றினை நடத்தி போராட்டகாரர்கள் களைந்து சென்றனர்;
குறித்த போராட்டத்தில் ஆசிரியர்கள் அதிபர்கள் இளைஞர்கள் சட்டத்தரணிகள் பேருந்து ஊழியர்கள்,அரச ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்