கோட்டாபய தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
153

அதிபர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் தொடர்பில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு, கோட்டை நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நேற்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களால் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட அரச எதிர்ப்பு போராட்டங்களின் போது, அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்களால் 17.5 மில்லியன் ரூபாய் பயணம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, குறித்த பணத்தொகை கோட்டை காவல்துறையினரிடம் போராட்டக்காரர்களால் ஒப்படைக்கப்பட்டிருந்ததோடு, இது தொடர்பில் காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பணம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலமொன்றை பதிவு செய்யுமாறு கோட்டை நீதவான் காவல்துறை விசேட குற்ற விசாரணைப் பிரிவுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here