கோதுமை மா விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிப்பு.

0
176

கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச் சூழ்நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம்மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

ஒரு தொழிலாளியின் வீட்டில் ஒரு நாளுக்கு 3 அல்லது 5 கிலோ வரை கோதுமை மாவை தனது உணவிற்காக பயன்படுத்துகின்றார்கள்.

அதிகரித்ததனை தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தோட்டத்தொழிலாளரகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கோதுமை மா அதிகரிப்பின் காரணமாக கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் அனைத்து பேக்கரி உணவு பொருட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தோட்டத் தொழிலாளர்கள் தங்களது நாளாந்த உணவின் பெரும் பகுதியினை கோதுமை மாவின் மூலமே பூர்த்தி செய்து வருகின்றனர்.

காலை வேலையிலும், இரவு வேளையிலும் அவர்களுக்குரிய நேரத்திற்கு ஏற்ப கோதுமை மாவினை பயன்படுத்தியே அவர்கள் தங்களுக்கு தேவையான உணவினை தயாரித்து கொள்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் குறைந்த சம்பளம் பெரும் இவர்கள் தற்போது அதிகரிக்கப்பட்ட மாவின் விலை காரணமாக தாங்கள் மேலும் மேலும் பொருளாதார சுமைக்கு தள்ளப்படுவதாகவும், பொருட்களின் விலை அதிகரிப்பு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று தோட்ட நிர்வாகத்தால் வாரத்தில் 3 நாட்கள் அல்லது 4 நாட்கள் மாத்திரமே வேலை வழங்குகின்றனர். இதன்காரணமாக இம்மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தோட்ட தொழிலாளர்களின் பொருளாதாரத்தை நலன் கருதி கோதுமை மாவை மானிய விலையில் வழங்குவதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும், பொருட்களின் விலைவாசியை அதிகரிக்காமல் இருப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

க.கிஷாந்தன்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here