கோதுமை மாவின் விலை குறைப்பு?

0
157

எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா தற்போதைய நிலையில் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.துறுக்கி மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.

நாட்டின் பிரதான கோதுமை மா விநியோக நிறுவனங்கள் இரண்டும், கடந்த காலங்களை இறக்குமதிகளை நிறுத்தியிருந்தன.இதனால், கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், அதன் விலைகள் 300 முதல் 400 ரூபா வரையில் அதிகரித்தது.

இந்த நிலையில், மீண்டும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளதுடன், அடுத்த வார இறுதியில் பாரிய தொகை கோதுமைநாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், விலை குறைவடையும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here