அரச கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க இன்று கோப் குழுவை சந்திக்க உள்ளார்.
இன்று பகல் 2.00 மணிக்கு கோப் குழுவை சந்திக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்திற்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனால் வழங்கப்பட்ட பிணை முறிகள் சம்பந்தமாக அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு கோப் குழுவினால் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அண்மையில் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கை தொடர்பில் இன்று கோப் குழு அவதானம் செலுத்த உள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.