கோயிலில் பதிவில்லாத அனைத்து குருமார்களையும் பதிவு செய்ய வேண்டும். சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா கோரிக்கை.

0
167

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடுகளோ, திருவிழாக்களோ சமய கிரியைகளோ நடைபெறுவதில்லை. இந்நிலையில் இந்து குருமார் நாடாளவிய ரீதியில் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காகவும், ஏனைய பணிகளுக்காகவும் இந்து கலாசார திணைக்களம் மற்றும் புத்தசாசன கலாசார சமய விவகார அமைச்சு இணைந்து பதிவுகனை மேற்கொண்டு வருகிறது எனின் குறித்த நடவடிக்கையில் ஆலயங்களில் வசிக்கின்ற குருமார்களின் விபரங்கள் மாத்திரம் தான் தற்போது திரட்டப்படுகின்றன.
எனினும் ஆலயங்களில் வதிவிடம் இல்லாத நூற்றுக்கணக்கான குருமார்கள் வேறு இடங்களில் இருந்து சென்று ஆலயங்களில் பூஜை நடாத்தி வருகின்றனர். இவர்கள் எவரும் பதியப்படுதில்லை ஆகவே குருமார்களாக ஆலயங்களில் சேவையாற்றுகின்ற அனைவரையும் பதியப்பட வேண்டும் என இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றினத்தின் செயலாளரும் அகில இலங்கை இந்து மா சபாவின் தலைவருமான சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.

இன்று (27) கொட்டகலையில் இந்து குருமார் ஒன்றிய தலைமைப்பீடத்தில் நடைபெற்ற ஊடகவியலளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அஙகு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..

இன்று மலையக குருமார் தொடர்பாக குருமார் தொடர்பான விபரங்கள் திரட்டும் போது சரியான முறையில் நடைபெறுவதில்லை. இங்குள்ள கலாசார உத்தியோகஸ்தர்களுக்கு கூட இது தொடர்பாக தெளிவான விளக்கமில்லை. அரசாங்கம் அறிவிக்கின்ற விடயங்கள் கூட எமது குருமார்களுக்கு சென்றடைவதில்லை அதற்கான ஒரு வழிமுறைகளும் மலையகப்பகுதியில் குறைவாகவே காணப்படுகின்றன.

இதே நேரம் ஏனைய பிரதேசங்களில் வாழும் குருமார்களுக்கு அரசாங்கத்தினால் கிடைக்கின்ற சலுகை பெற்றுக்கொடுக்கின்ற வசதிகள் மலையக குருமார்களுக்கு சென்றடைவதில்லை இன்று முன்னெடுக்கப்படும் நிவாரணங்கள் கூட அதிகமானவர்களுக்கு கிடைப்பதில்லை அவையும் பிரதான ஆலயங்களில் உள்ளவர்களுக்கு மாத்திரம் தான் கிடைக்கின்றன.

எனவே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதே நேரம் அனைத்து குருமார்களும் தற்போது இந்து கலாசார திணைக்களத்தின் கோரப்பட்டுள்ள விபரங்களை ஆங்கில மொழியில் பூர்த்தி செய்து உடன் கிடைக்க கூடிய வகையில் அனுப்பி வைக்குமாரும் அவ்வாறு விபரம் தெரியாதவர்கள் இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here