சஜித் அணியினருக்கு விதித்த அனைத்து தடைகளையும் நீக்கியது UNP!

0
10

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமையால் அக்கட்சி உறுப்பினர்கள் மீது ஐக்கிய தேசிய கட்சி எடுக்கவிருந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் அனைத்தையும் நீக்க தீர்மானித்துள்ளது. நேற்று (16) மாலை கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், சிறிகொத்தவில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதனால் ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்களை ஆராய முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பன தலைமையில் ஒரு குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியில் இந்த தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தவர்கள் மீண்டும் ஐ.தே.கவில் இணைந்து பணியாற்றுவதற்கு காணப்பட்ட அனைத்து தடைகளும் நீக்கப்பட்டுள்ளதென அக்கட்சியின் தவிசாளர் வஜீர அபேவர்தன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதிலிருந்து ஒரு பொதுவான கூட்டணியில் இணைந்து பணியாற்றுவதில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் இந்த செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here