பாராளுமன்ற அமர்வுகளை புதன்கிழமை 10 மணி வரையில் ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபை அமர்வில் தங்களது கருத்துக்களை வெளியிட அனுமதிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரினார்.
இந்த கோரிக்கையை மறுத்த சபை முதல்வரும், அவைக்குத் தலைமைத் தாங்கிய உறுப்பினரும் சபையை புதன் வரையில் ஒத்திவைத்தனர்.