சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்த 67 பேர் திருகோணமலையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று திங்கட்கிழமை இரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சல்லிசம்பல்தீவு மற்றும் திருகோணமலை கடற்பகுதியில் கடற்படையினர், நிலாவெளி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக வெளியேற முயன்ற குறித்த 67 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 02 முச்சக்கர வண்டிகள், ஒரு கெப் வாகனம் மற்றும் கார் ஒன்று போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.