சட்டவிரோதமாக ஊருக்குள் போதைபொருட்களை விற்பவர்களுக்கு எதிராக ஒட்டு மொத்த ஊராரும் போராட்டம்.

0
191

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட புரட்டொப் மேமலையில் சட்டவிரோதமாக ஊருக்குள் விற்கும் போதைப்பொருட்களுக்கு எதிராகவும் விற்பனை செய்பர்களுக்கு எதிராகவும் ஊர் மக்கள் போராட்டமொன்றை 18/05/2021 செவ்வாய்க்கிழமை முன்னெடுத்தெடுத்திருந்தனர்.

இதன்போது தோட்டத்தில் சட்டவிரோதமாக விற்கும் போதைப்பொருட்களும் விற்பனையாளர்களும் அதிகரித்திருப்பதால் ஊருக்குள் பல பிரச்சனைகள் உருவாகி வருவதால் அதனை தடுக்கும் முகமாக தோட்ட மக்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது ஊருக்குள் சட்டவிரோதமாக போதைபொருட்களை விற்பவர்களிடம் இனி விற்க கூடாதென கடிதங்கள் பெற்றுக்கொண்டதோடு மீறி விற்கப்பட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும் ஊர்மக்கள் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here