சதிகளை முறியடித்து கிவ் தோட்டத்தில் இந்திய வீடமைப்புத்திட்டம் முன்னெடுப்பு : சோ.ஸ்ரீதரன்

0
201

”பொகவந்தலாவை கிவ் தோட்டத்தின் இந்திய வீடமைப்புத்திட்டத்தினை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டத்தை முறியடித்து இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு முன்வந்த பயனாளிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப இந்திய அரசாங்கத்தின் 84000000 ( எட்டுக்கோடியே நாற்பது இலட்சம் ) ரூபாய் நிதி அன்பளிப்பில் பொகவந்தலாவை கிவ் தோட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 70 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இந்திய தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ரமேஸ்ஐயர் , மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சிங்.பொன்னையா , எம்.ராம் , ட்ரஸ்ட் நிறுவனத்தலைவர் வ.புத்திரசிகாமணி , மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் விஸ்வநாதன் , தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன் , இளைஞரணி தலைவர் பா.சிவநேசன் , உதவிச்செயலாளர் கல்யாணகுமார் , பிரதேசசபை உறுப்பினர்களான மஞ்சுளா , சசிகலா , நகரசபை உறுப்பினர் ராமேஸ்வரி , தோட்ட முகாமையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :

பல வருடங்களாக முன்னெடுக்கப்படாலிருந்த மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத்திட்டம் தற்போது அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நேரடி கண்காணிப்பின் மூலம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் வாழுகின்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள இந்திய அரசாங்கம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்ற இந்த நிலையில் இந்த மக்களுக்காக இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள மிகப்பெரிய கொடை 14000 வீடுகளாகும். அதற்காக நாம் இந்திய அரசாங்கத்துக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இன்று இந்தத்திட்டத்தை குழப்புவதற்கு ஒரு சிலர் சதி செய்து வருகின்றனர். பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். கிவ் தோட்டத்திலும் அவ்வாறானதொரு சம்பவம் இடம் பெற்றுள்ளது. எனினும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டதன் காரணமாக இந்திய வீடமைப்புத்திட்டத்தை செஞ்சிலுவை சங்கத்தின் கண்காணிப்புடன் இந்தத் தோட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளோம். இந்தத் தனி வீட்டுத்திட்டத்துக்கான நிலம் , உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியனவற்றைப் பெற்றுக்கொடுப்பதில் அமைச்சர் பொறுப்பு வாய்ந்த தரப்புக்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here