சதொச கிளைகளில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லையென நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
அரிசி, சிவப்பு பருப்பு மற்றும் சீனி விற்பனைக்கு சதொச நிறுவனம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சதொச கிளை முகாமையாளர்களுக்கு சதொச நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
குறித்த சுற்றறிக்கையை மீறிச் செயற்படும் ஊழியர்களை பணியிலிருந்து இடைநிறுத்தி, ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.