இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவர் சந்தனம் அருள்சாமியின் மறைவானது இலங்கை தொழிலாளர் காங்ரசிற்க்கு ஒரு பாரிய இழப்பு என இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
எஸ் அருள்சாமி அவர்களுடைய பூதவூடலுக்கு 07.01.2019 ஞாயிற்றுகிழமை மாலை அஞ்சலி செலுத்திய போதே அவர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்தார்
அருள்சாமி அவர்கள் இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஸ்தாபக தலைவர் சௌமிய
மூர்த்தி தொண்டமானுடைய காலபகுதியில் சௌமியமூர்ததி தொண்டமானுடன் இனைந்து
மலையக மக்களுக்கு அழப்பரிய சேவைகளை செய்து வந்தவர் அதுமட்டும் இன்றி
தோட்ட தொழிலாளர்களுடைய அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வினையும்
பெற்றுகொடுத்தார்
இதேவேலை எஸ்.அருள்சாமி அவர்கள் பாராளுமன்ற உருப்பினராகவும் மத்திய மாகாண
தமிழ் கல்வி அமைச்சராகவும் பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியத்தின
தலைவராகவும் நிதியத்தின் உறுப்பினராகவும் இ.தொ.கா.வின் சிரேஷ்ட்ட
உபதலைவராகவும் அவர் செயல்பட்டு வந்தார் அவருடைய இழப்பை எவ்வாறு ஈடுசெய்ய
போகின்றோம் என்பது எமக்கு தெரியாது இருந்தாலும் மலையக மக்களின்
சார்பாகவும் எங்களுடைய முழுமையான அஞ்சலியை செலுத்தியதாக அவர் மேலும்
குறிப்பிட்டார்
இதன் போது இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம் ஊவா மாகாண
முன்னால் அமைச்சர் செந்தில் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்ரசின்
பொதுச்செயலாளர் அனுசியா சிவராஜா உதவி பொதுச்செயலாளர் ஜீவன்தொண்டமான் மத்திய
மாகாண முன்னால் அமைச்சர் மருதபாண்டி இராமேஸ்வரன் மத்திய மாகாணசபை
உறுப்பினர்களான கணபதிகனகராஜ் பி.சக்திவேல் மற்றும் பலரும் இலங்கை
தொழிலாளர் காங்ரசின் உபதலைவர் சந்தனம் அருள்சாமியின் பூதவுடலுக்கு அஞ்சலி
செலுத்தபட்டமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)