சந்திரயான்-3 இன் ரோவர் நிலவில் தரையிறங்கும் வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ

0
230

இந்த விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.இந்தியாவின் நிலவின் தென்துருவத்துக்கு ஏவப்பட்ட சந்திரயான்-3 இன் ‘பிரக்யான்’ ரோவர் நிலவில் தரையிறங்கும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.இதேவேளை, இன்று தனது இரு நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கிரீஸில் இருந்து நேராக கர்நாடகாவின் பெங்களூருவுக்கு முன் திட்டமிடப்பட்ட பயணமாக செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, சந்திரயான்-3 திட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ குழுவின் விஞ்ஞானிகளை அவர் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 நாள் பயணத்திற்குப் பிறகு, சந்திரயான் -3 இன் ‘விக்ரம்’ லேண்டர், சந்திரனின் தென்துருவத்தைத் தொட்டது. இந்த சாதனையை முதலில் செய்த நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

இதேவேளை, தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொளி மூலம் சந்திரயான்-3 தரையிறங்கும் நேரலை ஒளிபரப்பில் பிரதமர்மோடி கலந்து கொண்டிருந்தார்.

குறித்த நேரலையில் , சந்திரயான்-3 திட்டமானது சந்திரனின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தை அடைந்ததன் மூலம் சரித்திரம் படைத்துள்ளது என்று பாராட்டிய பிரதமர் மோடி, “இந்தியா இப்போது நிலவில் உள்ளது” என தெரிவித்தார்.

இது போன்ற வரலாற்றுத் தருணங்களைப் பார்க்கும்போது, அது நமக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இது புதிய இந்தியாவின் விடியல் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு சந்திரனில் தரையிறங்கும் பணியை வெற்றிகரமாக நடத்திய நான்காவது நாடாகவும் இந்தியா பதிவாகியுள்ளது.

சந்திரயான்-3 விண்கலம் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் இறக்கி, தரையிறங்குவதற்கு முன்னதாக கிடைமட்ட நிலைக்கு சாய்ந்தது.

மேலும், இந்த விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here