” போரில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக தமிழ் மக்கள் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர். நாமும் எமது இதயபூர்வமான – உணர்வுப்பூர்வமான அஞ்சலிகளை இந்த சபையில் செலுத்துகின்றோம்” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரான வேலுகுமார் எம்.பி. தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (27) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற , அரசியல் நெருக்கடிகளால் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மாவீரர்களுக்கு இவ்வாறு அஞ்சலி செலுத்தினார் வேலுகுமார் எம்.பி.
” யுத்தத்தால் உயிரிழந்த தமது உறவுகளை நினைத்து, தமிழ் மக்கள் தமது பகுதிகளில் இன்று அஞ்சலி நிகழ்வுகளை நடத்தினர். மக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த உணர்வுபூர்வமான நிகழ்வை நாம் மதிக்க வேண்டும். அதனை குறுகிய அரசியல் நோக்கங்களுடன் பார்க்ககூடாது. நல்லிணக்கம் பற்றி வெறும் வார்த்தைகளால் மட்டும் பேசுவதில் பயனில்லை. இத்தகைய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும்” என்றார்.
மலையக பொடியன்