சமனல ஏரி நீர்த்தேக்கம் தொடர்பில் எச்சரிக்கை

0
149

சமனல ஏரி நீர்த்தேக்கத்தில் தொடர்ந்தும் ஓட்டைகள் காணப்படுவது மிகவும் ஆபத்தான நிலைமை என புவியியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புவியியலாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற முறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினரை அழைத்து வினவியபோது, ​​புவியியலாளர்கள் இது தொடர்பில் எச்சரித்ததாகவும், அதிகார சபையின் தரப்பான மின்சார சபை இந்தக் குழுக் கூட்டத்தை புறக்கணித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், கடும் மழையின் போது கொழும்பு நகரில் தேங்கும் நீரை வெளியேற்றுவதற்கு உரிய திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாததால், அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here