சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தை விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

0
119

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சந்தன தென்னகோன் கடிதமொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிடப்பட்டுள்ளார்.
அரச சேவையை அவதூறு செய்யும் வகையிலும், அரசின் கொள்கைகளை விமர்சிக்கவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டாம் என கண்டி மாவட்ட செயலகத்தின் கடிதத் தலைப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.ஜெயசிங்கவிற்கு “எச்சரிக்கை விடுத்தல்” எனும் தலைப்பில் கடிதம் ஒன்றை அவர் அனுப்பி வைத்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்பட்டால், அது ஸ்தாபன விதிக் கோவையின் XLVII அத்தியாயத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.ஜெயசிங்கவினால் பேஸ்புக் பக்கத்தில் அரசாங்கத்திற்கு எதிராக வெளியிடப்பட்ட கருத்தையடுத்தே இந்த எச்சரிக்கை கடிதம் வெளியிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here