சமூர்த்தி திணைக்களத்தினால் முதியோர்களுக்கு வழங்கப்படும் சமூர்த்தி கணக்கில் கொள்ளை- பொகவந்தலாவ பொதுமக்கள் விசனம்

0
194

சமூர்த்தி வலுவூட்டல் அமைச்சி மற்றும் சமூர்த்தி திணைக்களத்தினால் முதியோர்களுக்கு வழங்கப்படும் சமூர்த்தி கணக்கில் கொள்ளை

அம்பகமுவ பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் உள்ள அனைத்து கிராமசேவர்பிரிவிற்குட்பட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முதியோர்களுக்கான கூப்பன் புதிப்பிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சமூர்த்தி கூப்பன் கணக்கு இலக்கம் ஆரம்பிப்பதற்கு முதியோர்களிடம் 1000ரூபாவும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின கொடிவிற்பனைக்கு 1500ரூபாவும் முதியோர்களிடம் சமூர்த்தி உத்தியோகத்ரினால் பணம் வசூழிக்கபட்ட சம்பவம் ஒன்று 30.06.2018.சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.

கடந்த மேமாதம் 31ம் திகதி தொடக்கம் ஜீன்மாதம் 30ம் திகதி வரை சர்வதேச புகைத்தலுக்கான எதிர்ப்பு தினத்திற்கான கொடி விற்பனைக்காக பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள முதியோர்களிடமே அதிகமாக 1500ரூபா பெறபட்டுள்ளதாகவும் முதியோர்களுக்கான சமூர்த்தி கணக்கு இலக்கத்தை ஆரம்பிப்பதற்கு முதியோர்களிடம் 1000ரூபா பெறபட்டுள்ளதுடன் முதியோர்களுக்கு சமூர்த்தி உத்தியோகத்தரினால் வழங்கபட்டுள்ள பற்றுசீட்டில் 500ரூபா பதியமட்டுள்ளதாகவும் வழங்கபட்டுள்ள பற்றுசீட்டில் சமூர்த்தி உத்தியோகத்தினரின் இறப்பர் முத்திரை அச்சிடபடவில்லையெனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பகுதியை சேர்ந்த முதியோர்கள் தங்க ஆபரணங்களையும் கடைகளில் வைப்பில் ஈட்டும் வட்டிக்கு பணம் பெற்றுவந்து சமூர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இந்த குற்றச்சாட்டு குறித்து அம்பகமுவ பிரதேசசெயலாளர் ஆர்.டி.பி.சுமனசேகரவிடம் நாம் தொடர்பு கொண்டு வினவினோம்

அதற்கு பதிலளித்த அவர் சர்வதேச புகையிலை தின கொடியினை பெறுவோர்கள் தமக்கு விருப்பம் இருந்தால் மாத்திரமே தான் அந்த கொடியினை விற்கமுடியும் அவர்களுக்கு எந்த உத்தியோகத்தரும் பலாத்காரமாக விற்பனை செய்யமுடியாது என அவர் தெரிவித்தார்.

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here