அரசாங்கத்தினால், தனியார் ஊழியர்களுக்கு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்ட 2,500 ரூபாய் சம்பள உயர்வை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன, தொழிற்சங்க ஆணையாளர் நாயகத்துக்குக் கட்டளை பிறப்பித்துள்ளார்.
தனியார் ஊழியர்களுக்கான 2,500 ரூபாய் சம்பள உயர்வு நடைமுறையானது கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், தனியார் ஊழியர்களுக்கான 2,500 சம்பள அதிகரிப்பினை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
குறித்த விதத்தில் நடைமுறைப்படுத்தப்படாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் மற்றும் முதலாளிமார்கள் குறித்த சட்ட உறுப்புரையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி காலம் தாழ்த்திய வண்ணம் உள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.