சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

0
167

நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள கொட்டகலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்ட தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 06.12.2018 அன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.சுமார் 100ற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஸ்டோனிகிளிப் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தில்இ எதிர்ப்பு வாசகங்களை எழுதிய சுலோகங்களையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படுவது எங்களுக்கு பயனில்லை என தெரிவித்த தொழிலாளர்கள் நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்காவிட்டால் தேயிலை தொழிற்சாலையிலிருந்து விற்பனைக்காக அனுப்பப்படுகின்ற தேயிலை தூளை தொழிற்சாலையிலிருந்து தடுக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி சுகபோக வாழ்க்கையை நடத்தும் கம்பனிகாரர்கள் இன்றைய வாழ்வாதாரத்தினை நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை இறுதி பேச்சுவார்த்தையாக முன்னிருத்தி ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டும் என அழுத்தமான கோரிக்கையையும் முன்வைத்தனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here