சருமத்தை பொலிவாக வைத்து கொள்ள வேண்டுமா? பப்பாளியை இப்படி பயன்படுத்துங்க..!

0
78

பப்பாளி ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் பங்கு வகிக்கின்றது. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளது.

இதில் இதில் சரும ஆரோக்கியத்தை ஊக்குவிக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. முக்கியமாக பப்பாளியில் புத்துணர்ச்சியூட்டும் நொதிகள் உள்ளன.

இவை சருமத்துளைகளை சுத்தப்படுத்தி, சருமத்தை பளிச்சென்று வெளிக்காட்டும்.எனவே நீங்கள் உங்கள் சருமத்தை பொலிவாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள விரும்பினால் பப்பாளியை பயன்படுத்தலாம்.

அந்தவகையில் தற்போது இதனை எதனுடன் சேர்த்து எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

பச்சை பப்பாளியை அரைத்து சாறு எடுத்து, அவற்றை பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

நன்கு கனிந்த 1/2 கப் பப்பாளியை மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதை கண்களைச் சுற்றி தடவி குறைந்தது 12 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக தேய்த்து, நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால், கருவளையங்கள் விரைவில் மறையும்.

நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பப்பாளி காயை அரைத்து, முகத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here