சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு சூழலுக்கு எதிரான வன்முறைகளை தடுப்போம் “ஓர் பசுமையான தூய்மையான உலகம்” என்ற தொணிப்பொருளில் நுவரெலியா டீ பீல்ட் சிறுவர் அபிவிருத்தி சம்மேளனம் ஏற்பாட்டில் 27.06.2018 நாளை தலவாக்கலையில் மாபெறும் பேரணி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.காலை 09 மணிக்கு தலவாக்கலை நகரசபை மைதானத்தில் ஆரம்பிக்கப்படும் பேரணி தலவாக்கலை பஸ் திரிப்பிடத்திற்கு வந்தடையும் இப்பேரணியில் சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் சூழலுக்கு பாதுகாப்பான விடயங்களை உள்ளடக்கிய பதாதைகள் மற்றும் பெணர்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்குபற்றவூள்ளனர்; மாபெறும் பேரணியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
ஆக்கரப்பத்தனை நிருபர்