பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவிற்கு இடையில் இலங்கையினூடாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மாலைத்தீவு பிரஜைகள் இருவர் தெஹிவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து மாத்திரை வடிவிலான 385 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை, தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.