சளித்தொல்லைக்கான அற்புத நிவாரணத்தை தன்னுள்ளே கொண்டுள்ள துளசி !!

0
176

துளசி அதி அற்புதமான கிருமிநாசினி. வீட்டுக்கு கிருமிநாசினி பயன்படுத்துவதுப் போல மனித உடலுக்கான கிருமிநாசினியாக பயன்படுகிறது துளசி.

தினமும் துளசி இலையை மென்று சாறை விழுங்கி வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பல பிரச்னைகள் வாழ்நாள் முழுக்க வரவே வராது.சளித்தொல்லைக்கான நிவாரணத்தை தன்னுள் வைத்துள்ளது துளசி. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு.

துளசி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும். இருமல், சளி, ஜலதோஷம் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக கிடைக்கும் அருமருந்து துளசி. இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.

தினமும் சில துளசி இலைகளை மென்று தின்றாலே சர்க்கரையின் அளவு கட்டுப்படும். துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்கு பின்பு உட்கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால் சொரி, சிரங்கு போன்றவை குணமாகும்.

துளசி இலையுடன், அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here