சவூதி – குவைத் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!

0
1
மத்திய கிழக்கில் உக்கிர போர் நடந்துவரும் நிலையில், சவுதி அரேபியா மற்றும் குவைத்தை இலக்கு வைத்து ஈரான் இன்று (10) ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
டுபாய் மற்றும் பஹ்ரைனில் இன்று அதிகாலையில் ஏவுகணை தாக்குதலுக்கான சைரன்கள் ஒலித்தன.
அத்துடன், சவுதி அரேபியாவின் எண்ணெய் வளம் மிக்க கிழக்குப் பகுதியில் இரண்டு ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாகவும், குவைத்தின் ராணுவம் ஆறு ஈரான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்படுகின்றது.
இதுகுறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஈரானில் இருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வான் பாதுகாப்பு தற்போது பதிலளித்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசுவதோடு மட்டுமல்லாமல், ஈரான் அந்நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்பையும் குறிவைத்து வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலர் விலையை எட்டியது. எனினும் இன்று அது 90 டாலர் என்ற அளவில் குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here