2020 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத்
தோற்றி சித்தி பெற்ற சகல மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியருக்கும் வழிப்படுத்திய அதிபர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
கொரோனா பரவலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட முடக்கத்தின் போதும் கற்றலைச் சிறந்த முறையில் மேற்கொண்டதன் பயனாக சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இந்த மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் வழிப்படுத்திய அதிபர்களையும் இந்தத் தருணத்தில் வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
உயர்தர கற்றலுக்குத் தகுதி பெற்ற சகல மாணவர்களும் கல்வியை இடைவிடாது உயர்கல்வியைத் தொடர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
மேலும் இந்தப் பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்கள் மேலும் ஒரு முயற்சியில் ஈடுபட்டு மீண்டும் பரீட்சைக்குத் தோற்றி சித்தி பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.