சாதாரணதர பரீட்சை -அதிபர்களுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு

0
139

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் -2022 (2023) தொடர்பாக பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமைச்சின் அறிக்கையின்படி, பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகளை தடுத்து வைக்க வேண்டாம் என பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அனுமதி அட்டைகள் கிடைக்காத காரணத்தினால் எந்தவொரு மாணவரும் பரீட்சைக்குத் தோற்ற முடியாத பட்சத்தில் அதற்கு அதிபரே பொறுப்பேற்க வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here