சாதாரணதர பரீட்சை நாளை ஆரம்பம் : ஏற்பாடுகள் பூர்த்தி

0
80

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை (06) தொடங்கவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara)தெரிவித்தார்.

இதன்படி 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.இதில் மூன்று லட்சத்து 87,648 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,331 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாகவும் உள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பல இடங்களில் விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here