சிங்கப்பூரை தளமாகக் கொண்ட விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் ஏசியா ஜூலை மாத இறுதியில் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்த உள்ளது, இதன் விளைவாக 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விமான நிறுவனத்தின் அதிகரித்து வரும் விநியோகஸ்தர் செலவுகள், அதிக விமான நிலைய கட்டணங்கள் மற்றும் தீவிரமான பிராந்திய போட்டி ஆகிய காரணங்களினாலேயே இந்நிறுவனமானது அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்தத்திட்டமிட்டுள்ளது.
ஜூலை 31 அன்று முன்பாக அடுத்த ஏழு வாரங்களில் ஜெட்ஸ்டார் ஏசியா படிப்படியாகக் குறைக்கப்பட்ட சேவையை வழங்கும் என்பதோடு முன்பதிவுகளை இரத்துச்செய்த பயணிகளுக்கு முழு பணத்தைத் திரும்பப் வழங்கவுள்ளதோடு மீண்டும் முன்பதிவு செய்ய விரும்பின் குவாண்டாஸ் குழும விமானங்களில் மீண்டும் முன்பதிவு செய்யமுடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிநீக்க சலுகைகளைப் பெறுவார்கள் என்று விமான நிறுவனம் அறிவித்துள்ளது.