கொழும்பில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென்னிந்தியாவின் பிரபல திரைத்துறை இசையமைப்பாளர் இளையராஜா கொழும்பை வந்தடைந்துள்ளார்.
சிங்கள பாரம்பரிய நடன வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாளை (25) மற்றும் 27,28 ஆம் திகதிகளில் கொழும்பில் இசை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவருடன் பிரபல பாடகர்கள் ஏழு பேரும் இசைக் கலைஞர்கள் 27 பேரும் பிரசன்னமாகியிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




