சித்திரை வருடப் பிறப்பு எப்போது மலர்கிறது…!

0
218

சித்திரை வருடப்பிறப்பானது 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை குரோதி எனும் பெயரில் மலர்கின்றது என சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் மஹாராஜ ராஜகுரு ஸ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் சித்திரை புத்தாண்டு பிறப்பு(Sinhala and Tamil New Year) தொடர்பில் நிலவிவரும் பல்வேறு வகையான சந்தேகங்களை போக்கும் வகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு(Batticaloa)- கிரான் ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.இது குறித்து மேலும் கூறுகையில்,”இவ்வருடம் சித்திரை வருடப்பிறப்பானது 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை குரோதி எனும் பெயரில் மலர்கின்றது.

முதல்நாள் 13 ஆம் திகதி, சனிக்கிழமை இரவு புதுவருடம் பிறக்கும் நேரம் என பஞ்சாங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பங்களை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சித்திரை வருடப்பிறப்பானது 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை குரோதி எனும் பெயரில் மலர்கின்றது.

குரோதி என்பது விரோதங்கள், பகைமையை ஏற்படுத்தும் வருடமாகவும் அரசியல் ரீதியாகவும் மக்களிடையே பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்துவதாக அமையும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here