சிறப்பான கொள்கைகளை முன்வைப்பவர்களை இ.தொ.கா ஆதரிக்கும்.

0
166

” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான அரசின் தவறாக வரிக்கொள்கைகளும், பிரதான காரணமாகும்.” – என்று இ.தொ.காவின் உப தலைவரும், பிரஜா சக்தி திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

நாவலப்பிட்டி இம்புல்பிட்டிய பிரதேசத்துக்கான குடிநீர் திட்டத்தினை திறந்து வைக்கும் வைபவம் இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான பாரத் அருள்சாமியின் வேண்டுக்கோளிற்கு அமைவாக ஹல்நூர் தொண்டு நிறுவனத்தின் ஒரு கோடி ரூபா நன்கொடையின் கீழ் இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான பாரத் அருள்சாமியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹல்நூர் தொண்டு நிறுவனத்தின் தலைவர் மொகமட் அலியார், பணிப்பாளர் ரகு இந்திரகுமார் மற்றும் பொதுமக்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் இப்பகுதியை சேர்ந்த 600 குடும்பங்களை உடைய 1500 பயனாளிகள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

30 வருட காலமாக குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வந்த இம்புல்பிட்டிய பிரதேச மக்களுக்கு குடிநீர் திட்டத்தை செய்துக் கொடுத்த ஹல்நூர் தொண்டு நிறுவனத்தினருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி பொன்னாடை போர்த்தி ஞாபகார்த்த சின்னங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டு மக்களுக்கு இன்று ஏதேனுமொரு விடயத்துக்காக வரிசைகளில் காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை வெகுவிரைவில் மாறி, இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். எனவே, மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் ஆதரவு வழங்கும்.

பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் வரி வருமானம் குறைக்கப்பட்டது. இதனால் அரச வருமானம் பாதிக்கப்பட்டது. தற்போதை நெருக்கடி நிலைமைக்கு இதுவும் ஓர் பிரதான காரணமாகும்.

இனம், மதம், மொழி, கட்சி என ‘பிரித்தாளும் தந்திரம்’ மூலம் தமது இருப்புகளை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசியல் வாதிகள் முற்பட்டனர். அந்த மாய வலைக்குள் மக்களும் சிக்கினர். இன்றைய பின்னடைவுக்கு மக்கள் பிரிந்து நின்றமையும் ஓர் காரணம். எனவே, நாம் இலங்கையர்களாக பயணிப்போம்.

சிறப்பான கொள்கைகளை முன்வைப்பவர்களை ஆதரிப்போம். அதனால்தான் தற்போதை சூழ்நிலையில் இ.தொ.கா. நடுநிலை நிலைப்பாட்டை வகித்துவருகின்றது.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here