தலவாக்கலை பகுதியில் சிறுத்தை ஒன்று தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர நுவரெலியர் வித்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர்
குறித்த சம்பவம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை மல்லிகைப்பூ தோட்டத்தில் இன்று ஐந்தாம் தேதி காலை 7 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவுது இன்று காலை சுமார் 7 மணி அளவில் வீட்டில் இருந்தோர் வெளியேறு சந்தர்ப்பத்தில் சிறுத்தைப்புலி ஒன்று வீட்டில் புகுந்து கட்டில் அடியில் மறைந்திருந்துள்ளது குறித்த வீட்டில் நபர்கள் சிறுத்தைப்புலியின் காலடிகளை பார்த்து டார்ச் லைட் ஒன்றினை எடுத்து வீட்டினுள் தேடிய போது திடீரென சிறுத்தை பாய்ந்து தோள்பட்டை எனையும் கைகளையும் காயப்படுத்தி உள்ளது. கடும் காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுத்தை புலி தொடர்ந்து வீட்டினுள் இருப்பதாகவும் இடதுகுறித்து போலிஸாருக்கும் வனலாக்கா பிரிவு அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சிறுத்தைப்புலியினை மயக்கமடைய செய்து அதனை வெளியில் எடுக்கும் பணியினை வனலாக்கா அதிகாரிகள்இமற்றும் மிருக வைத்தியர்கள் ஈடுப்பட்ட வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மலைவாஞ்ஞன்