சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய 17 வயது பாடசாலை மாணவன்..! குவியும் பாராட்டுக்கள்

0
190

பிபில – மெதகம 17 அஞ்சல் பகுதியில் வெள்ளம் காரணமாக நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுமியை 17 வயது பாடசாலை மாணவரொருவர் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி பிபில – மெதகம 17 அஞ்சல் பகுதியில் தாயுடன் சென்ற சிறுமியொருவர் பெல்லன் ஓயாவின் பாலத்தை கடக்க முயன்ற வேளை திடீரென ஓடையில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது மகளை காப்பாற்றுமாறு அருகிலிருந்தவர்களிடம் தாயார் கதறி அழுந்து உதவிகோரியுள்ளார். இருப்பினும், நீரோட்டம் அதிகளவு காணப்பட்டமையினால் பலர் நீரில் இறங்கி சிறுமியை காப்பாற்ற தயக்கம் காட்டியுள்ளனர். இதன்போது பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த 17 வயதுடைய உயர்தர பாடசாலை மாணவரொருவர் தனது உயிரை பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து 50 மீட்டருக்கு மேல் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை பலத்த முயற்சியினால் காப்பாற்றியுள்ளார்.

இந்த மாணவனின் வீரச் செயலை பாராட்டி மொனராகலை அமுனேகந்துர தேசிய பாடசாலை சிறுமியை காப்பாற்றிய பாடசாலை மாணவனுக்கு பாராட்டு விழாவையும் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here