அரசாங்கத்தினால் திரிபோஷ வழங்கப்படாததன் காரணத்தினால் குழந்தைகள் போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களுக்கு திரிபோஷவுக்கு பதிலாக முட்டை வழங்க வேண்டும்
திரிபோஷ உற்பத்தியை வழமைக்கு கொண்டு வரும் வரை ஆறு மாதம் தொடக்கம் மூன்று வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு , மாற்று போசணைத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதற்கமைய சிறுவர்களுக்கு திரிபோஷாவுக்கு பதிலாக முட்டையை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் திரிபோஷ வழங்கப்படாததன் காரணத்தினால் குழந்தைகள் போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்
மேலதிக ஊட்டச்சத்தாக வழங்கப்பட்ட திரிபோஷவை வழங்க முடியாத நிலை காணப்படுமாயின் அதற்கு நிகரான மாற்றீடு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆறு மாதம் தொடக்கம் மூன்று வயதுக்கு இடைப்பட்டசிறுவர்களுக்கு மீண்டும் திரிபோஷ வழங்கப்படும் வரையில், மாதாந்தம் ஒருத் தொகை முட்டையை வழங்குவதற்கு பரிந்துரைப்பதாக அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.