சிறுவர்களுக்கு இடையில் தற்போது கண்சார்ந்த நோய்த்தொற்று பரவி வருவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நோய்த்தொற்று தொடர்பில் பெற்றோர் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கண் சிவப்பாகுதல், கண்களில் இருந்து நீர் வெளியேறுதல், கண் அரிப்பு மற்றும் இருமலுடன் கூடிய தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் என்பன காணப்படுவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்படுமாயின் சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.