‘குட் நைட்’ திரைப்படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராகச் சாய் அபயங்கர் பணியாற்றப் போவதாகவும் அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.