சிவனொளிபாதமலை தரிசித்து வீடு செல்லும் வழியில் நண்பர்களுடன் நீராடச்சென்ற இளைஞர் நீரில்  மூழ்கி பலி

0
124
சிவனொளிபாதமலை தரிசனம் செய்து விட்டு மீண்டும் வீடு திரும்பிகொண்டிருக்கும் வேளையில் இடையில் நண்பர்கள் உடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று கினிகததேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது

இச் சம்பவம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நகருக்கு அருகில்  உள்ள அம்பகமுவ ஆற்றில் இன்று 11 ம் திகதி மாலை 4.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆணமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த கவிந்து திசார வயது 22 அடையாளம் காணப்பட்டுள்ளன
குறித்த நபர் நீராடிக் கொண்டிருக்கும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு கற்குகையில் இறுகிய தன் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது
குறித்த நபரின் சடலத்தினை கெனில்வேத் தோட்ட மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைககாக கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here