சிவனொளி பாதமலைக்கான புனித யாத்திரை காலங்களில் சுகாதார வழிகாட்டல் முறைமை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சிவனொளி பாதமலைக்கு செல்லும் பக்தர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான அட்டை அல்லது அதன் நகலை உடன் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவனொளி பாதமலை யாத்திரை காலத்தில் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொக்குபோதகம வெளியிட்டுள்ளார்.
மாவட்ட செயலாளரால் வெளியிடப்பட்ட விதிமுறைகளில் யாத்திரீகர்கள் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்யவோ அல்லது பராமரிக்கவோ கூடாதெனவும் அறிவிக்கப்ப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்றி வர்த்தக நிலையங்களை நிர்மாணிக்கவும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த ஆண்டு மே 16 ஆம் திகதியுடன் யாத்திரைக்காலம் நிறைவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.