சிவனொளிபாதமலைக்கு சொந்தமான லக்ஷபான தோட்டம் முள்ளுகாமம் மேற்பிரிவு பிரதேச காட்டுப்பகுதியில் தீ பரவல்!!

0
178

நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவனொளிபாதமலைக்கு சொந்தமான லக்ஷபான தோட்டம் முள்ளுகாமம் மேற்பிரிவு பிரதேச காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது.12.12.2018 அன்று இரவு பரவிய தீ காரணமாக குறித்த காட்டுப்பகுதியில் சுமார் கிட்டதட்ட இரண்டரை ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

யாராவது விஷமிகள் தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக நல்லதண்ணி பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.

ஆனால் 13.12.2018 அன்றும் குறித்த காட்டுப்பகுதியில் தீ பரவிய வண்ணமே காணப்பட்டது.

தீயை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் விமானப் படையினரின் உதவி பெறப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியும் கிடைத்தமை குறிப்பிடதக்கது.

 

க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here