சிவனொளிபாதமலைக்கு ஹெலிகொப்டர் உதவியுடன் சுத்தமான குடிநீர் விநியோகத்திட்டம்

0
170

இலங்கையிலுள்ள முக்கிய நான்கு சமயத்தவர்களினதும் புனிதத் தலமாக சிவனொளிபாதமலை திகழ்கிறது. இந்த மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையேயான எல்லையில் அமைந்துள்ளது.

இது கடல் மட்டத்திலிருந்து 7359 அடி உயரமானதாகும். பருவகாலம் ஆரம்பித்துவிட்டால் யாத்திரிகள் வெவ்வேறு இடங்களிலிருந்து இங்கு வருவார்கள். பொதுவாக யாத்திரிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இரவிலே படி ஏறத்துவங்கினால், ஏறி முடிக்கும் போது ஏறத்தாழ காலையில் சூரிய உதயத்தைக் காண முடியும்.

மேலும் இந்த மலை பல ஆறுகளின் நதிமூலம். இலங்கையின் நீண்ட நதியான மகாவலி கங்கை, களு கங்கை, களனி கங்கை உள்ளிட்ட பல ஆறுகள் ஊற்றெடுப்பது இந்த மலையில் தான் ஆரம்பமாகின்றது.

இத்தனை சிறப்பு மிக்க சிவனொளி பாத மலையில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் இலங்கை விமானப்டையின் உதவியுடன் இடம்பெற்றுள்ளது.

இலங்கை விமானப்படையின் எம்.ஐ.17 ரக ஹெலிகொப்ரர் மூலம் சிவனொளிபாதமலையை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை சிறப்பாக முடிவடைந்துள்ளது.இதன்போது மக்களுக்குத் தேவையான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான பொருட்களை கொண்டு செல்வது தொடர்பிலான பணி வெற்றிகரமான நிறைவடைந்துளள்து.

நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் ஊடாக சிவனொளிபாதமலையில் வழிபாடுகளில் ஈடுபடும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்காக, குடிநீர் வநியோக கட்டமைப்பு ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது.இதற்கு அவசியான மின்மாற்றி மற்றும் மின்சார உபகரணங்கள் போன்றவற்றுடன் குடிநீர் விநயோக கட்டமைப்பிற்கு தேவையான உபகரணங்களை இந்த ஹெலிகொப்பரர் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

25 தடவைகள் பயணித்து சுமார் 25 தொன் நிறையுடைய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. சீரற்ற காலநிலை காரணமாக சில தடங்கள் ஏற்பட்டபோதும் இப்பணி சிறப்பாக இப்பொழுது முடிவடைந்துள்ளது. இதன் மூலமாக சிவனொளிபாதமலையில் குடிநீர்ப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here