இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது.இதன்போது மலையக மக்கள் முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் நுவரெலியாவில் அமையப்பெற்றுள்ள சீதையம்மன் கோவிலின் பிரசாதம் மற்றும் நினைவு சின்னம் கையளிக்கப்பட்டு சீதையம்மன் கோவில் புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடினார்.
சீதைக்காக அமைக்கப்பெற்ற உலகின் முதல் கோவில் என்ற ஸ்தானத்தை கொண்டுள்ள நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு வருகை தருவதாகவும் கோவிலின் புனரமைப்புக்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கும் அதற்கான முழுமையான ஏற்பாடுகளையும் தான் ஏற்படுத்தி தருவதாக இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இராதாகிருஸ்ணனிடம் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்