இவ்வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் உளவு பார்த்த அமெரிக்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் 78 வயதான ஜான் ஷிங் வான் லியுங். இவர் ஹாங்காங்கில் வசித்து வந்தார். இவர் மீது சீனாவுக்கு எதிராக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கடந்த 2021-ல் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு அந்நாட்டின் தென்கிழக்கு நகரமான சுசோவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி ஜானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதியானதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.




