சீனாவின் மத்திய பகுதியில் பாரிய நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது, இன்று (28) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்தவகையில், மத்திய சீனாவின் (Central China) ஹுனான் (Hunan) மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே இதற்கு காரணமென தெரியவந்துள்ளது.
குறித்த நிலச்சரிவில் சிக்குண்டு 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இந்தநிலையில், 300 க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், சீனாவில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால், அங்கு தொடர்ந்தும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.