சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற சென்ற 15வயதுடைய மாணவிக்கு பிறந்த குழந்தை- பதுளையில் சம்பவம்

0
175

சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்கு பதுளை வைத்திசாலைக்கு சென்ற 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுளை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவியே சுகயீனம் காரணமாக தனது தாயுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள பதுளை பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதன் போது குறித்த மாணவி பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுமி கர்ப்பமுற்றுள்ளார் என்று கூறி மாணவியை மகப்பேற்று பிரிவில் அனுமதித்துள்ளனர்.

மகப்பேற்று பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவி குழந்தையை பிரசவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான 21 வயது திருமணமான இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here