தனது மனநலத்தில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்று கூறும் எதிர்க்கட்சித் தலைவர் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் திறனிலிலேயே பிரச்சினை இருப்பதாக தெரிகிறது என்று சாடியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள X தள பதிவில்” நலிந்த ஜயதிஸ்ஸ, “மனநிலை” என்று நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பாட அலகுத் தொகுதிகளில் ஆபாச வலைத்தள இணைப்புகள் உட்பட வெளிப்படையான பிழைகள் இருந்த காரணத்தினாலேயே நான் இந்த சீர்திருத்தங்களை எதிர்த்தேன். இவை உங்களது மதிப்பாய்வுகளுக்கு உட்படவில்லையென்றால் உண்மையான பிரச்சினை என்னுடைய மனநிலையைப் பற்றியது அல்ல, உங்களது திறன் பற்றியது. எனவே, ஏனையவர்களை மதிப்பிடுவதற்கு முன், தயவுசெய்து தொடர்புடை விடயங்கள் குறித்த ஆராய்வுகளில் ஈடுபடுங்கள்.” எனறு குறிப்பிட்டுள்ளார்.




